கொரோனா வைரஸ் தகவலை தமிழில் வெளியிட்ட விக்கிப்பீடியா

கொரோனா வைரஸ் தகவலை தமிழில் வெளியிட்ட விக்கிப்பீடியா

கொரோனா வைரஸ் தகவலை தமிழில் வெளியிட்ட விக்கிப்பீடியா
Published on

கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் விக்கிப்பீடியா வெளியிட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் இந்தியா உட்பட உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதேசமயம் கொரோனா வைரஸ் குறித்த வதந்திகள் அதைவிட வேகமாக பரவி வருகின்றன. கொரோனா மருந்து, ஏலியன் தாக்குதல், கோழிக்கறி ஆபத்து, பையோ வார், வணிக ரீதியான வைரஸ் என பல புரளிகள் தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. உலக சுகாதார மையமே கொரோனா குறித்து மக்களுக்கு அங்கீகாரமான தகவல்களும், தெளிவுகளும் கிடைப்பதில்லை என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கொரோனா குறித்த தகவல்களை அனைத்து தரப்பு மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என தகவல் தேடல் தளமான விக்கிப்பீடியா களத்தில் இறங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் முதல்கட்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, வங்கமொழி, இந்தி, உருது, போஜ்புரி, அரபிக் உள்ளிட்ட 9 மொழிகளில் கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை அது வெளியிட்டுள்ளது.

இந்த தகவல்களை விக்கிபிராஜெக்ட் மெடிஷன் என்ற மருத்துவ தகவல்கள் பக்கத்துடன் தொடர்பில் உள்ள ஏராளமான மருத்துவர்களுடன் இணைந்து 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் சேர்ந்து விக்கிப்பீடியாக் குழு தயாரித்துள்ளது. இந்தியாவில் ‘சுகாதார இணைப்புகள் திட்டத்தின் சிறப்பு விக்கிப்பீடியா’ என்ற அமைப்புக்குழுவின் ஆசியர்கள் இந்தத் தகவலை திரட்டி, மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து மொழிகளுக்கேற்ப எழுதியிருக்கின்றனர்.

மக்களுக்கு கொரோனா குறித்த தெளிவான தகவல்களை வழங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விக்கிப்பீடியாவின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா என்பது அனைவரும் அனைத்துவிதமான தகவல்களை தேடும் இணையதளப் பக்கமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com