அதிகரிக்கும் கொரோனா; தீவிரமாகும் கட்டுப்பாடுகள்​..! - இன்றைய முக்கிய கொரோனா செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா; தீவிரமாகும் கட்டுப்பாடுகள்​..! - இன்றைய முக்கிய கொரோனா செய்திகள்
அதிகரிக்கும் கொரோனா; தீவிரமாகும் கட்டுப்பாடுகள்​..! - இன்றைய முக்கிய கொரோனா செய்திகள்

* கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ரயிலில் பாதுகாப்பாக பயணித்திட தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் அறிவுறுத்தியுள்ளது. விரிவாக வாசிக்க > "தேவையற்ற ரயில் பயணங்களைத் தவிர்த்திடுங்கள்" - தெற்கு ரயில்வே மதுரை கோட்டம்

* இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 879 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவாக வாசிக்க > இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 879 பேர் பலி 

* ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி கிடைத்துள்ளது. விரிவாக வாசிக்க > ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இதுவரை எந்தெந்த நாடுகள் அனுமதி? சிறப்பம்சங்கள் என்ன?

* சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க > 100 படுக்கையறை வசதி கொண்ட கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு!

* உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா திருவிழா காரணமாக வைரஸ் தொற்றின் தாக்கம் மேலும் தீவிரம் அடையுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.  விரிவாக வாசிக்க > கும்பமேளாவில் காற்றில் பறக்கிறதா கொரோனா கட்டுப்பாடுகள்? 

* கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மேலும் பல தடுப்பூசிகளுக்கு அனுமதி தருமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். விரிவாக வாசிக்க > ’’பல புதிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளியுங்கள்” - பிரதமருக்கு சோனியா கடிதம் 

* கொரோனா பரவல் குறித்த பல்வேறு குழப்பங்கள், அந்நோய்க்கான சிகிச்சையில் உள்ள சிக்கல்களை பார்க்கும்போது அது முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என தோன்றுவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசிஸ் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > "கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்" - உலக சுகாதார அமைப்பு கணிப்பு

* கொரோனா அதிகம் உள்ள பத்து மாநிலங்களில் மத்திய சுகாதாரத்துறையின் உயர்மட்டக் குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரிவாக வாசிக்க > அதிகரிக்கும் கொரோனா: 10 மாநிலங்களில் உயர்மட்ட குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டம்!

* தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையில் 36 சதவிகிதம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். விரிவாக வாசிக்க > கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில் 36% பேர் சென்னைவாசிகள்!

* மதுரை விமான நிலையத்தில் உள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சுகாதாரத் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். விரிவாக வாசிக்க > கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை? ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு நோட்டீஸ்!

* தஞ்சையில் இரண்டாவது டோஸ் கோவாக்ஸின் தடுப்பூசி போட வந்தவர்கள் தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விரிவாக வாசிக்க > கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு? 2வது டோஸ் போடவந்தவர்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!

* திரைப்பட காமெடி நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விரிவாக வாசிக்க > திரைப்பட காமெடி நடிகர் செந்திலுக்கு கொரோனா: குடும்பத்துடன் மருத்துமனையில் சிகிச்சை

* கொரோனாவின் அதிதீவிர பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களான மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகியவற்றில் உள்ள 50 மாவட்டங்களில் மக்களால் பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாக மீறப்பட்டு வருவதாக மத்திய அரசு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. விரிவாக வாசிக்க > கொரோனா பாதிப்பில் 3 மாநிலங்களின் 50 மாவட்டங்களில் மோசமான நிலை: மத்திய அரசு எச்சரிக்கை

* இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் (சிபிஎஸ்இ) மற்றும் அரசு அதிகாரிகளும் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் தேதிகள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவாக வாசிக்க > அதிதீவிரமாக பரவும் கொரோனா... நெருங்கும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் - முடிவுதான் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com