ஊரடங்குகளால் மூடிக்கிடக்கும் பள்ளிகள்.. இந்தியாவில் அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள்

ஊரடங்குகளால் மூடிக்கிடக்கும் பள்ளிகள்.. இந்தியாவில் அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள்
ஊரடங்குகளால் மூடிக்கிடக்கும் பள்ளிகள்.. இந்தியாவில் அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள்

கொரோனா தொற்று காரணமாக தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். இந்த நிலையில், குடும்பத்தின் வறுமையைப் போக்க குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் போக்கு இந்தியாவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுபற்றிய விரிவான கட்டுரை ஒன்றை டெக்கான் ஹெரால்டு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் வீட்டு வேலை போன்ற சிறு பணிகளைச் செய்த பல பெண்கள் வேலையிழந்துள்ளனர். ஊரடங்கு நாட்களுக்கு முன்பேகூட இந்தியாவில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில் போராட்டம்தான். 5 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாக 2018 ஆம் ஆண்டு வெளியான சர்வேதச புள்ளிவிவரம் தெரிவித்திருந்தது.

பங்களாதேஷ், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளில் நிலைமை மிக மோசம். பொதுவாக பத்து லட்சம் குழந்தைகள் ஏதாவது ஒரு வேலையில் இருக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக குழந்தைகள் பள்ளிகளுக்கு வெளியே இருப்பதுடன், குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருப்பதாக யுனிசெப் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் ரம்யா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும். "பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது தாமதமாகியுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. இவையெல்லாம் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com