நாடு முழுவதும் கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 33 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 33 பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 33 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள கொரோனா பாதிப்பு குறித்து நாள்தோறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் நாள்தோறும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,412 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் இன்னும் சமுதாயப் பரவல் ஏற்படவில்லை என்றும் அதனால் பீதியடையத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை இணை செயலாளர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com