கொரோனா வைரஸ் எதிரொலி : மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கொரோனா வைரஸ் எதிரொலி : மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கொரோனா வைரஸ் எதிரொலி : மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பள்ளிகளுக்கு விடுமுறை
Published on

கொரோனா வைரஸ் தாக்கத்தால் சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 44 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அம்மாநில சுகாதாரத்துறை உறுதி செய்தது. எனினும், பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை என அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாஹெல் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே நக்சல்களால் பாதிக்கப்பட்ட சுக்மா மாவட்டத்தில் பணியாற்றி வரும் சிஆர்பிஎஃப் வீரருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த சிஆர்பிஎஃப் வீரர் விடுமுறைக்காக சொந்த ஊரான கேரளாவுக்குச் சென்ற நிலையில், அவருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் எதிரொலியால் பள்ளிகளுக்கு கால வரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், கேரளா, டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் திரையரங்குகள் மற்றும் மால்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com