கொரோனா வைரஸ் பாதிப்பு : இந்தியாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பினால் டெல்லியில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இதுவரை 80க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் முதியவர் ஒருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் தற்போது டெல்லியில் 69 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் மூடல், கோயில்களுக்கு நோய் பாதிப்பு உள்ள பக்தர்கள் வர வேண்டாம் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் போட்டிகள் ரத்து, கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூன் உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.