கொரோனா நோய் பரவும் வேகம் குறைந்துள்ளது - மத்திய அரசு

கொரோனா நோய் பரவும் வேகம் குறைந்துள்ளது - மத்திய அரசு
கொரோனா நோய் பரவும் வேகம் குறைந்துள்ளது - மத்திய அரசு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது. எனினும் நோய் பரவும் வேகம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியிருந்தது. இந்த பட்டியலில் நேற்று குஜராத்தும் இணைந்தது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவி்ல் 3320 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 2,080 பேருக்கு மேல்
பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை நூறை தாண்டியுள்ளது.


இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இணைச் செயலர், இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைந்து வருகிறது என்றார். மார்ச் 15 ஆம் தேதி முதல்
21 ஆம் தேதி வரை, நோய்பரவல் 2.1 சதவிகிதமாக இருந்த நிலையில், ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குப் பிறகு 1.2 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றார். மேலும் நோய் தொற்றுள்ளோரில் 80
சதவிகிதம் பேர் குணமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


இதனிடையே, கேரளாவைச் சேர்ந்த நிறுவனம், குறைந்த செலவில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ளது. இதை ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத் துறை
அமைச்சர் ஹர்ஷ் வர்தன், புதிய கருவி மூலம் ஒரே நேரத்தில் 30 மாதிரிகளை சோதனை செய்ய முடியும் என்றும், 2 மணி நேரத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனவும்
தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com