இந்தியாவில் 1 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு; உயிரிழப்பு 1.45 லட்சம்!

இந்தியாவில் 1 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு; உயிரிழப்பு 1.45 லட்சம்!
இந்தியாவில் 1 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு; உயிரிழப்பு 1.45 லட்சம்!

இந்தியாவிலும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துவிட்டது. தற்போது, கொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

அமெரிக்காவில் ஒரு கோடியே 78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துவிட்டது.அதேவேளையில், ஆறுதல் அளிக்கும் விதமாக, 95 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 45 ஆயிரம் இறந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 7 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.இதனிடையே, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுவது கட்டாயம் அல்ல என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும். விருப்பப்பட்டால் அதனை போட்டுக்கொள்ளலாம். கொரோனாவுக்கு எதிரான தங்களையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா - டிச.19 நிலவரம்: மொத்த பாதிப்பு - 1,00,04,825 | குணமடைந்தோர் - 95,49,923 | உயிரிழப்பு - 1,45,171 | சிகிச்சையில் - 3,07,097

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com