கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் நிதியுதவி;கல்விச்செலவு - பினராயி விஜயன்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் நிதியுதவி;கல்விச்செலவு - பினராயி விஜயன்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் நிதியுதவி;கல்விச்செலவு - பினராயி விஜயன்

”கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் நிதியுதவி அளிப்பதோடு 18 வயதுவரை மாதம்தோறும் 2000 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்து கல்விச்செலவையும் அரசே ஏற்கும்” என்று அறிவித்திருக்கிறார், கேரள முதல்வர் பிரனராயி விஜயன்.

 கொரோனாவின் இரண்டாவது அலையால் இந்தியாவில் தினமும் 4 ஆயிரம் மக்களுக்குமேல் இறந்து வருகிறார்கள். இதனால், பல குழந்தைகள் தங்களின் பெற்றோர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் வாழும் சூழல் உருவாகி இருக்கிறது. இதற்காக, ஏற்கனவே நடிகர் சோனு சூட் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கவேண்டும் என்று மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் “கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணமாக 3 லட்சம் ரூபாயும், 18 வயது வரை 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், முழு கல்வி செலவையும் ஏற்கும்” என்று அறிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com