கொரோனா முன்கள வீரர்களுக்கு முப்படைகளின் கவுரவம் - காற்றில் பறந்த மலர்கள்
கொரோனா வைரஸூக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடும் மருத்துவர்கள் உள்ளிட்டோரை முப்படையினரும் இன்று கவுரவிக்கும் வகையில்ம ருத்துவமனைகளின் மீது பூ தூவப்பட்டது.
கொரோனாவை வீழ்த்த போராடி வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் முப்படைகள் சார்பில் கவுரவிக்கப்படுவார்கள் என முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார். இதன்படி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து இரு சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் மருந்து பொருட்களுடன் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்தன. சுகோய், மிக் மற்றும் ஜாகுவார் ஆகிய 9 போர் விமானங்கள் டெல்லியின் வான்பரப்பில் பறந்து மருத்துவர்களை கவுரவித்தன.
தவிர மருத்துவமனைகள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்களை தூவுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததையடுத்து மருத்துவமனைகள் முன்பு பேண்டு வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. அதன் படி மருத்துவமனைகளின் மீது பூ தூவப்பட்டது. மருத்துவர்கள் மருத்துவமனையின் வெளியே வந்து நின்று மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.