கொரோனா தடுப்பூசி விரைவிலேயே பயன்பாட்டிற்கு வந்து விடும் : பிரதமர் மோடி
மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசி விரைவில் கிடைத்துவிடும் என்றாலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து நாம் கவனத்துடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அஸ்ஸாமைச் சேர்ந்த ஜிதேண்டர் என்ற விவசாயி,விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என புகார் அளித்ததாகவும் , புதிய வேளாண் சட்டங்களின் மூலம் அவருக்கு அதிகாரிகள் பாக்கியை பெற்று தந்ததாகவும் குறிப்பிட்டார்.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டடம் நடைபெற்று வரும் நிலையில், பல விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக பிரதமர் கூறினார். டிசம்பர் 6-ஆம் தேதி டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும் நிலையில், அவரது பெருமைகளை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.