கொரோனா கட்டுப்பாடுகளால் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் பாதிப்பு: கேரள எம்.பி

கொரோனா கட்டுப்பாடுகளால் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் பாதிப்பு: கேரள எம்.பி
கொரோனா கட்டுப்பாடுகளால் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் பாதிப்பு: கேரள எம்.பி

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு தீர்வு காண உதவுமாறும் மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஸ்ரேயம்ஸ் குமார், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். வளைகுடா நாடுகள் விதித்துள்ள நுழைவுக் கட்டுப்பாடுகள் மற்றும் விமான சேவைக்கு தடை காரணமாக அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக விமானப் போக்குவரத்து ரத்தானதால் ஏராளமான இந்தியர்கள் அங்கு வேலைக்கு திரும்ப முடியாத நிலையில் தவிப்பதாக ஸ்ரேயம்ஸ் குமார் தெரிவித்துள்ளார். இதனால் கேரளா போன்ற மாநிலங்களில் பெரிய அளவில் சமூக, பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஸ்ரேயம்ஸ் குமார் தன் கடிதத்தில் கூறியுள்ளார்.

இதன் பின் பேசிய எம்.பி.ஸ்ரேயம்ஸ் குமார், வளைகுடா நாடுகளிடம் பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்வதாக அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com