இந்தியா
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் : முக்கிய துறை அமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் : முக்கிய துறை அமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய துறைகளின் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் பாதிப்பு மிகவும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாள்களாக நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 3 இலட்சத்துக்கும் மேலாக பதிவாகிவரும் சூழலில், பல்வேறு மாநிலங்களில் கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மேலும் பல மாநிலங்களில் ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள் பற்றாக்குறை உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய துறைகளின் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார்.