சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கொரோனா பரிசோதனை உபகரணங்கள்..!

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கொரோனா பரிசோதனை உபகரணங்கள்..!

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கொரோனா பரிசோதனை உபகரணங்கள்..!
Published on

(கோப்பு புகைப்படம்)

கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான 6.5 லட்சம் உபகரணங்கள் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆன்டிபாடி பரிசோதனை, ஆர் என் ஏ பரிசோதனைக்குத் தேவைப்படும் 6.5 லட்சம் உபகரணங்கள் சீனாவின் குவாங் சூ விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சீனாவிற்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

அடுத்த 15 நாள்களில் சீனாவி்ல் இருந்து 20 லட்சம் பரிசோதனை உபகரணங்கள் இந்தியாவிற்கு அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவப் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக ஒருகோடியே 50 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களையும் இந்தியா ஆர்டர் செய்துள்ளதாகவும் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே முதல் கட்டமாக இந்தியாவிற்கு வழங்க சீனா தயாரித்த உபகரணங்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com