\
நாடு முழுவதும் மே 31 வரை பொது முடக்கம் : மத்திய அரசு

நாடு முழுவதும் மே 31 வரை பொது முடக்கம் : மத்திய அரசு

நாடு முழுவதும் மே 31 வரை பொது முடக்கம் : மத்திய அரசு
Published on: 

இந்தியா முழுவதும் பொது முடக்கத்தை மே 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த பொது முடக்கம் இன்று இரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் இன்று மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மே 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்தன.

இந்நிலையில் நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அத்துடன் நாடு முழுவதும் பச்சை மண்டலம், ஆரஞ்சு மண்டலம் மற்றும் சிகப்பு மண்டலத்திற்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com