இந்தியாவில் 2-வது நாளாக சற்றே அதிகரித்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு 2-வது நாளாக சற்றே அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி கடந்த 24 மணி நேரத்தில் 48,786 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,04,11,634 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 61,588 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 2,94,88,918 பேர் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் 5,23,257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு நாளில் மட்டும் 5,005 பேர் உயிரிழந்திருப்பதால் மொத்த உயிரிழப்பு 3,99,459ஆக அதிரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 96.97 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.31 ஆகவும் உள்ளது.