இந்தியாவில் ஒரே நாளில் 12,885 பேருக்கு கொரோனா: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இந்தியாவில் ஒரேநாளில் 12,885 பேருக்கு கொரோனா க்ண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் 12,426 ஆகவும், நேற்று 11,903 ஆகவும் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 12,885 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 15,054 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,36,97,740-ல் இருந்து 3,37,12,794 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.23 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.34 சதவீதமாகவும் உள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 461 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,59,191-ல் இருந்து 4,59,652 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,48,579 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 107,63 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் 30,90,920 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.