\
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Published on: 

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி நாட்டில் கொரோனா கோரத் தாண்டவம் நடத்தி வருகிறது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அதேபோல் பிரிட்டன், ஆஸ்திரேலியா இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதுவரை 206 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது

இத்தாலியை சேர்ந்த 69 வயது முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com