தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
Published on

மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத், கேரளா, தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 68,020 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 84.5 சதவீதம் பேர் மேற்கண்ட 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக தினசரி கொரோனா பாதிப்பு 40,414 ஆக உள்ளது. தமிழகத்தில் 2194 ஆக கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு உள்ளது. நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 5,21,808 ஆக உள்ளது.

நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியை கடந்துவிட்டது. இன்று காலை 7 மணி வரை, 6.05 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 72வது நாளான நேற்று, மொத்தம் 2,60,653 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,13,55,993-து எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32,231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 291 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com