தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம்!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம்!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம்!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன், இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதிக்கு தற்பொழுது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளதாக தெரிவித்தார். கொரோனா பரவல் அதிகம் இருக்கக்கூடிய முதல் 10 மாவட்டங்களில் புனே, நாக்பூர், மும்பை, தானே, நாசிக் மற்றும் பெங்களூரு ஆகியவை இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்ச் 1-ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்து 293 என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது 28 ஆயிரத்து 699 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் பஞ்சாபில் மார்ச் 1-ந் தேதி 579 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 2 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொருத்தமட்டில் தினசரி கொரோனா பாதிப்பு மார்ச் 1-ஆம் தேதிக்குப் பிறகு வெகுவாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 15 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com