இந்தியாவில் 1000-க்கும் கீழாக குறைந்த கொரோனா மரணம்: ஒரேநாளில் 46,148 பேருக்கு பாதிப்பு
இந்தியாவில் ஒரேநாளில் 46,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 148 ஆக உள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 2 லட்சத்து 79 ஆயிரத்து 331 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்று பாதிப்பால் 979 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 96 ஆயிரத்து 730 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 58 ஆயிரத்து 578 பேர் குணமடைந்தனர், இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 9 ஆயிரத்து 607 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்போது 5 லட்சத்து 72 ஆயிரத்து 994 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் சதவீதம் 96.80% ஆக அதிகரித்திருக்கிறது.