\
தன்னை தாக்கியதாக காவலர் புகார்: பாஜக பெண் எம்.பி மீது வழக்குப் பதிவு

தன்னை தாக்கியதாக காவலர் புகார்: பாஜக பெண் எம்.பி மீது வழக்குப் பதிவு

தன்னை தாக்கியதாக காவலர் புகார்: பாஜக பெண் எம்.பி மீது வழக்குப் பதிவு
Published on

பாஜக பெண் எம்.பி, தன்னைத் தாக்கியதாக காவலர் கொடுத்த புகாரை அடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் தவ்ரஹ்ரா தொகுதி பாஜக எம்.பி., ரேகா வர்மா. இவரது பாதுகாப்பு பணியில் சில காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவர் ஷியாம் சிங். இவர், ரேகா வர்மா தன்னைத் தாக்கியதாக முகமதி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். 

அந்த மனுவில், ‘’கடந்த 9 ஆம் தேதி, ரேகா வர்மாவின் பாதுகாப்பு பணியில் இருந்த என்னை, காரணமே இல்லாமல் திடீரென அடித்தார். அவமானப்படுத்தும் விதமாக பேசினார். பின்னர் கொன்று விடுவதாக மிரட்டிவிட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டார். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com