ஆபாச படம் பதிவு செய்ததால் கூட்டுறவு சங்க பதிவாளர் பணியிடை நீக்கம்

ஆபாச படம் பதிவு செய்ததால் கூட்டுறவு சங்க பதிவாளர் பணியிடை நீக்கம்

ஆபாச படம் பதிவு செய்ததால் கூட்டுறவு சங்க பதிவாளர் பணியிடை நீக்கம்
Published on

புதுச்சேரி அரசு அதிகாரிகள் வாட்சப் குழுவில் ஆபாச படம் பதிவு செய்ததாகக் கூறி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சிவக்குமாரை புதுச்சேரி அரசு பணியிடை நீக்கம் செய்தது.

புதுச்சேரி அரசு அதிகாரிகளின் தகவல் மற்றும் பணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் இருக்கிறார். பதிவாளர் சிவக்குமார் நேற்று அந்த வாட்ஸ் அப் குழுவில் ஆபாசப்படம் ஒன்றை பதிவு செய்ததால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கிரண் போடி உத்தரவிட்டார்.

இதையடுத்து, சிவக்குமார் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகையில் இருந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிவக்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com