ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கையளிக்கிறார் ராஜ்நாத்சிங்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கையளிக்கிறார் ராஜ்நாத்சிங்
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கையளிக்கிறார் ராஜ்நாத்சிங்

தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.

முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் அவசரமாக கூடியது. இதில் பாதுகாப்புப் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் விபத்து தொடர்பாக பிரதமரிடம், பாதுகாப்புத் துறை அமைச்சர் விரிவாக விளக்கியதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. முப்படைகளின் உயரதிகாரிகளும் பிரதமரை சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக டெல்லியில் உள்ள பிபின் ராவத் இல்லத்தில் அவரது மகளை சந்தித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆறுதல் கூறியிருந்தார். இதற்கிடையே, விபத்து தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com