குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: பிரதமருடன் அவசர ஆலோசனையில் அமைச்சர் ராஜ்நாத் சிங்

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: பிரதமருடன் அவசர ஆலோசனையில் அமைச்சர் ராஜ்நாத் சிங்

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: பிரதமருடன் அவசர ஆலோசனையில் அமைச்சர் ராஜ்நாத் சிங்
Published on

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து, பிரதமருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டரொன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்திருந்தது.

முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்காக பல உயர் ராணுவ அதிகாரிகள் இதில் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத் பயணித்ததாக ராணுவ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. அவருடைய மனைவியும் அவருடன் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு எரிந்துள்ளதால் பிபின் ராவத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை. மொத்தம் 14 பேர் பயணித்தாக சொல்லப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக, மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத்துத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் நரேந்திர மோடியை அவசரமாக சந்தித்துள்ளார். அங்கு விபத்து குறித்து பிரதமரிடம் அமைச்சர் விவரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் முடிவில், இவ்விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்பது தெரியவரும்.

ஆலோசனை முடிவில், இந்த விபத்தின் முழு பின்னணி என்ன - எதனால் விபத்து ஏற்பட்டது போன்ற விவரங்கள் குறித்து விசாரிக்கப்படும் என நம்பப்படுகிறது. விரைவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விபத்து நடந்த நீலகிரிக்கு நேரில் வருவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com