மானியத்துடன் கூடிய கேஸ் சிலிண்டர் விலை நள்ளிரவு முதல் ரூ.2.83 அதிகரித்துள்ளது.
கேஸ் சிலிண்டர்களின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கின்றன. மாதத்தின் முதல் நாள் இந்த விலை மாற்றம் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த மாதத்துக்கான, விலைள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் மானியத்துடன் கூடிய சிலிண்டர் ஒன்றுக்கு சென்னையில் ரூ.2.83 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.481.84 ஆக இருந்த மானிய சிலிண்டர் விலை ரூ.484.67 ஆக உயர்ந்து ள்ளது.
மானியமில்லா சிலிண்டருக்கும் சென்னையில் ரூ.58.00 உயர்ந்துள்ளது. அதன்படி ரூ.712.50 ஆக இருந்த சிலிண்டர் விலை 770.50 ஆகியுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு போன்றவை காரணமாக, இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளது