சுற்றுலா கையேட்டில் தாஜ்மஹால் நீக்கப்பட்ட விவகாரம்: பிருந்தா காரத் கண்டனம்

சுற்றுலா கையேட்டில் தாஜ்மஹால் நீக்கப்பட்ட விவகாரம்: பிருந்தா காரத் கண்டனம்

சுற்றுலா கையேட்டில் தாஜ்மஹால் நீக்கப்பட்ட விவகாரம்: பிருந்தா காரத் கண்டனம்
Published on

உத்தரப் பிரதேச மாநில சுற்றுலா கையேட்டில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டிருப்பது, மதவாத அரசியலையே வெளிப்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் விமர்சித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்கிறது. அம்மாநில சுற்றுலா தளங்கள் அடங்கிய கையேட்டை அரசு வெளியிட்டது. அதில் உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் இடம்பெறவில்லை. இதற்கு  கண்டனம் தெரிவித்துள்ள பிருந்தா காரத், மதவாத அரசியலையே வெளிப்படுத்துவதாகவும் இந்த நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

உ.பி.மாநில சுற்றூலா கையேட்டில் கங்கையில் ஆரத்தி நடைபெறும் படம் அட்டையில் இடம்பெற்றுள்ள நிலையில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் கையேட்டில் இடம்பெறவில்லை, உத்தரப்பிரதேச சுற்றுலாத்துறைக்கு வருமானம் ஈட்டித்தரும் தாஜ்மஹால் சுற்றுலா கையேட்டில் இருந்து நீக்கப்பட்டிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com