பீகார் கல்லூரி மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் மோடி, தோனி படம் இடம்பெற்றதால் சர்ச்சை!

பீகார் கல்லூரி மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் மோடி, தோனி படம் இடம்பெற்றதால் சர்ச்சை!
பீகார் கல்லூரி மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் மோடி, தோனி படம் இடம்பெற்றதால் சர்ச்சை!

பீகாரில் கல்லூரி மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, எம்.எஸ்.தோனி புகைப்படங்கள் இடம்பெற்றது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தின் தர்பாங்கா மாவட்டத்தில் உள்ளது லலித் நாராயணன் மிதிலா என்ற பல்கலைக்கழகம். இதனுடன் இணைந்த மூன்று கல்லூரிகளில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. அதற்கான ஹால்டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்ட நிலையில், அதில் சிலவற்றில் பிரதமர் மோடி, தோனி, பீகார் மாநில கவர்னர் பாகு சவுகான் புகைப்படங்கள் இடம்பெற்றது பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து பேசிய பல்கலைக்கழகப் பதிவாளர், மாணவர்கள் தங்களது புகைப்படங்களையும், தரவுகளையும் பதிவேற்றம் செய்தால் அனுமதி சீட்டு வழங்கப்படும். ஆனால் சில குறும்புக்கார மாணவர்கள் பிரதமர் மோடி உள்ளிட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்த நிலையில், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார். சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் வழக்கும் பதிவு செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com