தொடர்ந்து பலியாகும் பழங்குடியின மக்கள்...

தொடர்ந்து பலியாகும் பழங்குடியின மக்கள்...

தொடர்ந்து பலியாகும் பழங்குடியின மக்கள்...
Published on

ஆந்திராவின் வனப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் தொடர்ந்து பலியாகி வருவது அச்சமூகத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சவராயீ என்ற வனப்பகுதி கிராமம் உள்ளது. பழங்குடி மக்கள் வசித்து வரும் இங்கு கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு திருமண விழா நடந்தது. இதில் விருந்து சாப்பிட்ட அந்த கிராம மக்களுக்கு, சில நாட்களுக்குப்பின் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டன. வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட கிராமத்தினர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 2 வாரங்களில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில், ராஜமகேந்திரவரம், காக்கிநாடா பகுதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் உயர்மட்ட மருத்துவக்குழு ஒன்றையும் முதலமைச்சர் அக்கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் சவராயீ கிராமத்துக்கு சென்று ஆய்வு நடத்தியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடும் அறிவித்துள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com