நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 1.5% வீழ்ச்சியடையும் : ரிசர்வ் வங்கி ஆய்வில் கணிப்பு

நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 1.5% வீழ்ச்சியடையும் : ரிசர்வ் வங்கி ஆய்வில் கணிப்பு

நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 1.5% வீழ்ச்சியடையும் : ரிசர்வ் வங்கி ஆய்வில் கணிப்பு
Published on

ரிசர்வ் வங்கி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 1.5% வீழ்ச்சியடையும் என தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸால் பெரும்பாலான நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அமெரிக்கா, சீனா என வளர்ந்த நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் சறுக்கியுள்ளன. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளும் பொருளாதாரத்தில் பாதிப்பை கண்டுள்ளன. இதனை மீட்பதற்கு மத்திய அரசு சார்பில் பல நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதியை பெருக்க தீவிரம் காட்டப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் பொருளாதார நிலையை கணக்கீடு செய்ய 5,076 குழுக்கள் கொண்ட அமைப்புடன் சேர்ந்து ரிசர்வ் வங்கி சார்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் நுகர்வோரின் நம்பகத்தன்மை மற்றும் வாங்கும் திறன் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையுமென கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி 1.5% வரை சரிவடையும் என்றும், ஆனால் அடுத்த நிதியாண்டில் ஜிடிபி 7.2% வரை வளர்ச்சியடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தனியாரின் இறுதி நுகர்வுச் செலவு 0.5% சரியும் என்றும், அடுத்த நிதியாண்டில் இது 6.9% வரை உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மூலதனப் பொருட்களின் மொத்த உற்பத்தியும் 6.4% சரிவடைந்து, பின்னர் 5.6% அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com