ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்காததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானில் தற்போது நிலவும் சூழல் குறித்து ஆலோசனை நடத்துதவற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான கூட்டத்துக்கு இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. வரும் 10ஆம் தேதி இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு சீனா, பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்ததுள்ளது. ஆனால் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் புறக்கணிக்க முடிவு செய்திருப்பது துரதிருஷ்டவசமானது என்றும், இது ஆச்சரியமளிக்கும் முடிவு அல்ல என்றும் கூறியுள்ளது.