\
புதியக்கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மே 17-ம் தேதி ஆலோசனை

புதியக்கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மே 17-ம் தேதி ஆலோசனை

புதியக்கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மே 17-ம் தேதி ஆலோசனை
Published on

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மே 17 ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்த உள்ளார்.

முன்னதாக, 1986 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக்கொள்கைக்கு பதிலாக மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தது. அதற்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த கல்விக்கொள்கைக்கு தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன.

இதனிடையே புதிய கல்விக் கொள்கையின் மாநில மொழிப்பெயர்ப்புகளை மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்டு இருந்த நிலையில், அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் புதிய உயர்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற பொன்முடி புதிய கல்விக்கொள்கையை தமிழகத்தில் நுழையவிடமாட்டோம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com