‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்

‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்
‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான ஆலோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, தெலங்கானாவில் குறைந்த செலவில் வாடகை வீட்டுவசதி வளாகங்கள் கட்டும் யோசனைக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது.

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்புக்குழுவின் 56-வது கூட்டம் டெல்லியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. இதில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3.61 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வீடுகள் கட்டும் பணிகளை விரைவுபடுத்தவும் தாமதமில்லாமல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா கேட்டுக்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தவறான தகவல்களை அகற்றும் நோக்கத்துடன் இ-நிதி தொகுப்பு இணையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையத்திலிருந்து நிதி சார்ந்த அனைத்துத் தரவுகளையும் வெளிப்படைத் தன்மையோடு பெற முடியும் என்று மிஸ்ரா கூறியுள்ளார். இந்தத்திட்டத்தை விரைவில் அமலாக்க, பகுதி வாரியாக திட்ட அலுவலர்களுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பயிற்சி அளிக்க வேண்டுமென்று அவர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு மற்றும் தெலங்கானாவில் மாதிரி 2-ன் கீழ் குறைந்த செலவிலான வாடகை வீட்டுவசதி வளாகங்கள் கட்டுவதற்கான யோசனைக்கும், வீட்டுவசதி அமைச்சக செயலாளர் ஒப்புதல் அளித்துள்ளார். அதனுடன் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ரூ.39.11 கோடி மானியத்துடன் நகர்ப்புறங்களுக்குக் குடிபெயர்ந்தோர் மற்றும் ஏழைகளுக்கு மொத்தம் 19,535 வீடுகள் கட்டுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் முத்து

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com