\
உ.பி.யில் சிறுமியை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - காவலர் உட்பட இருவர் கைது

உ.பி.யில் சிறுமியை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - காவலர் உட்பட இருவர் கைது

உ.பி.யில் சிறுமியை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - காவலர் உட்பட இருவர் கைது
Published on

உத்தரபிரதேசத்தில் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த காவலர் உட்பட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமி ஒருவரை இரண்டு மர்ம நபர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது போன்ற வீடியோ, உத்தரபிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக வைரலாக பரவி வந்தது. இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கும் தெரியவந்ததை அடுத்து, இதுகுறித்து அவரிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது அவர், தன்னை கடந்த வாரம் இரு மர்மநபர்கள் காரில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதை வெளியே கூறினால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியதாக தெரிவித்தார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அலிகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சிறுமி கடத்தப்பட்ட இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், அந்த சிறுமியை கடத்திய இரண்டு பேரில் ஒருவர் கன்னோஜ் மாவட்ட ஆயுதப் படையில் காவலராக பணிபுரியும் லகேந்திர சிங் (24) என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, போலீஸார் அவரை நேற்று கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அவரது நண்பர் அமித் குமார் (23) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். போலீஸ் காவலர் ஒருவரே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com