மத்தியப்பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி

மத்தியப்பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி

மத்தியப்பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி
Published on

மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 14,100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் சித்திரகூட் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த பிரேம் சிங் உயிரிழந்ததால், கடந்த 9ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் போட்டியிட்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், சுமார் 65 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன.

இதில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிலன்ஷூ சதுர்வேதி, பாஜகவின் வேட்பாளர் சங்கர் தயாள் திரிபாதியை விட 14,100 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தொகுதியில் உயிரிழந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரேம் சிங், 1998, 2003 மற்றும் 2013 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com