“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்” - செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று இரவுக்குள் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்திபவனில் கடந்த இரண்டு நாட்களாக 10 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதன்பிறகு விருப்ப மனுக்கள் தொடர்பாக ஆய்வு செய்ய நேற்று மாநில தேர்தல் குழு கூட்டம் நடந்தது.

Selva perunthagai
Selva perunthagaipt desk

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் தகுதியான மூன்று வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருடன் ஆலோசித்து ஹரி சௌத்ரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு குழு உடன் விவாதிக்கப்படும். மத்திய தேர்தல் குழு தலைவர்கள் கூடி அதில் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் பெயர்கள் இன்று இரவுக்குள் அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com