\
ராஜஸ்தானில் இருந்து எம்.பி ஆகிறார் மன்மோகன் சிங்!

ராஜஸ்தானில் இருந்து எம்.பி ஆகிறார் மன்மோகன் சிங்!

ராஜஸ்தானில் இருந்து எம்.பி ஆகிறார் மன்மோகன் சிங்!
Published on

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். ஐந்து முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ள இவர், அசாம் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவரது பதவிக்காலம் ஜூன் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.
 


அம்மாநில பாஜக எம்.பி., மதன்லால் சைனி ஜூன் மாதத்தில் காலமானார். அவர் இடத்தில் மன்மோகன் சிங் போட்டியிடுகிறார். இதற்காக வரும் 13 ஆம் தேதி மனு தாக்கல் செய்கிறார். வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com