“பாஜக - டி.ஆர்.எஸ் ரகசிய கூட்டணி” - நடிகை விஜய சாந்தி தாக்கு

“பாஜக - டி.ஆர்.எஸ் ரகசிய கூட்டணி” - நடிகை விஜய சாந்தி தாக்கு

“பாஜக - டி.ஆர்.எஸ் ரகசிய கூட்டணி” - நடிகை விஜய சாந்தி தாக்கு
Published on

பாஜகவைப் பற்றி தமிழக மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா பிரச்சார பீரங்கி விஜய சாந்தி தெரிவித்துள்ளார். அவர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கேள்வி : முதன்முறையாக காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அந்த அளவிற்கு டி.ஆர்.எஸ் (தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி) கட்சி வலுவாக உள்ளதா?

பதில் : ஓட்டு பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைத்துள்ளோம். டி.ஆர்.எஸ் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அவர்கள் அராஜகம் செய்துள்ளனர். அதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே டி.ஆர்.எஸ்ஸை கண்டிப்பாக தோற்கடிக்க வேண்டும் என அனைவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.

கேள்வி : உங்கள் கூட்டணி வலுவாக உள்ளதா? பாஜகவும் 119 இடங்களில் தனித்து போட்டியிடுகிறதே ?

பதில் : பாஜக பணமதிப்பிழப்பு மூலம் மக்களுக்கு சவுக்கடி கொடுத்தனர். இது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் பாருங்கள் மக்கள் பாஜக மீது எவ்வளவு வெறுப்பாக உள்ளனர். அவர்கள் மத்தியில் ஒன்றும் செய்யவில்லை. மாநிலத்தில் டி.ஆர்.எஸ் ஒன்றும் செய்யவில்லை. இருவரும் மறைமுகமாக இருட்டில் கூட்டணி வைத்துள்ளனர். 

கேள்வி : ஆனால் பிரதமர் மோடி கூறும்போது, டி.ஆர்.எஸ்ஸும் காங்கிரஸ் கூட்டணியும் ஒரு நாணயத்தில் இரு பக்கங்களாக உள்ளன. அவை தெலுங்கானாவிற்கு எந்த வளர்ச்சியும் கொடுக்கவில்லை. பாஜகவே அதை செய்யும் என்கிறாரே? 

பதில் : மோடி ஒரு துடைப்பத்தை கொடுத்து எல்லோரையும் பெருக்கச்சொல்லி முட்டாள் ஆக்கிவிட்டார். தமிழக மக்களுக்கு தெரிந்துவிட்டது. பாஜக என்றால் என்ன? மோடி என்றால் என்ன என்று.

கேள்வி : தெலுங்கானாவில் என்ன பிரச்னைகள் உள்ளன?

பதில் : முதலில் வேலைவாய்ப்பு. இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். அத்துடன் தண்ணீர் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை என எல்லாம் உள்ளது.

கேள்வி : காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான கட்சி என்று விமர்சிக்கிறார்களே?

பதில் : காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான கட்சி அல்ல. அது முஸ்லிம்கள், இந்துக்கள், ஏழை மக்கள் என அனைவருக்குமான கட்சி. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com