\
டிவி விவாதத்திற்குப்பிறகு மாரடைப்பு: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மரணம்!

டிவி விவாதத்திற்குப்பிறகு மாரடைப்பு: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மரணம்!

டிவி விவாதத்திற்குப்பிறகு மாரடைப்பு: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மரணம்!
Published on: 

 உத்திரபிரதேச மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்  மாரடைப்பால் இன்று மரணமடைந்துள்ளது அக்கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காசியா பாத்தில்  உடல்நிலை சரியில்லாமல் எசோதா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.  

இதற்கு, காங்கிரஸ் கட்சி ராஜீவ் தியாகியின் திடீர் மறைவால் மிகவும் வருந்துகிறோம். அவர், ஒரு தீவிர காங்கிரஸ் காரர் மட்டுமல்ல அவர் தீவிர தேசபக்தர். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இருக்கும் என்று அறிவித்திருக்கிறது.

ராஜிவ் தியாகியின் மரணம் குறித்து பா.ஜ.க தலைவர் சம்பித் பத்ரா கூறும்போது,  இன்று அவருடன் ஒரு டிவி விவாதத்தில் கலந்துகொள்ள கொண்டோம். ஆனால், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தது  நம்பமுடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். இன்று மாலை டிவி விவாதத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்தவருக்குத்தான் உடல்நிலை சரியில்லாமல் போனது. ராஜிவ்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.   

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com