காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் !

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் !

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் !
Published on

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல்(71) காலமானார்.

கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி கொரோனாவில் பாதி்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அகமது படேல். கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தாலும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டார். அகமது படேலின் நுரையீரல் கடுமையாகப் பாதிக்ககப்பட்ட நிலையில் அந்த பாதிப்பு மற்ற உடல் உறுப்புகளும் பரவியது.

இதையடுத்து, மேதாந்தா மருத்துவமனையில் கடந்த 14-ஆம் தேதி அகமது படேல் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அகமது படேல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார். இந்தத் தகவலை அகமது படேலின் மகன் பைசல் படேல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com