"குடும்ப நலனைவிட கட்சியின் நலனே முக்கியம்" - சோனியாவுக்கு சென்ற கடிதம் !

"குடும்ப நலனைவிட கட்சியின் நலனே முக்கியம்" - சோனியாவுக்கு சென்ற கடிதம் !

"குடும்ப நலனைவிட கட்சியின் நலனே முக்கியம்" - சோனியாவுக்கு சென்ற கடிதம் !
Published on

குடும்பத்தைவிட கட்சியின் நலனே முக்கியம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் சத்யதேவ் திரிபாதி, முன்னாள் எம்.பி. சந்தோஷ் சிங் என கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 9 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், கட்சிக்காக உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை என்றும், மூத்த தலைவர்கள் அவமதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

குடும்பத்தைவிட கட்சியின் நலனே முக்கியம் என செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்கள், கட்சியின் வளர்ச்சிக்காக அதன் ஜனநாயக மரபுகளை மீட்டெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். கட்சிக்கு பொருத்தமான தலைமை தேவை என கடந்த மாதம் சோனியா காந்திக்கு 23 தலைவர்கள் எழுதிய கடிதம் விவாதங்களுக்கு வித்திட்ட நிலையில், தற்போதைய கடிதமும் பிரச்னையை உண்டாக்கும் என கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com