காங். 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்: முன்னாள் முதல்வர்களின் மகன்களுக்கு வாய்ப்பு.. ஆனால்?

நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
கமல்நாத், அசோக் கெலாட்
கமல்நாத், அசோக் கெலாட்ட்விட்டர்

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. கட்சிகளுக்குள் கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் பங்கு பிரிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் தலைமை கடந்த மார்ச் 8ஆம் தேதி, 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இந்த நிலையில், இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் அசாம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், டாமன் - டையூ உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக அசாமில் 12 இடங்களையும், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 10 இடங்களையும், குஜராத்தில் 7 இடங்களையும், உத்தரகாண்ட்டில் 3 இடங்களையும் டாமன் டையூவில் 1 இடத்தையும் என மொத்தம் 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இதில் மூத்த தலைவர் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட்டின் மகன் வைபர் கெலாட் ஜல்லூர் (ராஜஸ்தான்) தொகுதியிலும் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத்தின் மகன் நகுல் நாத் சிந்த்வாரா (மத்தியப் பிரதேசம்) தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் தொகுதியில் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் சுரு தொகுதி பாஜக எம்.பியான ராகுல் கஸ்வான், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நிலையில், அவருக்கு அதே தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளித்துள்ளது. அதேநேரத்தில், காங்கிரஸின் இரண்டாவது பட்டியலில் சச்சின் பைலட்டின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்நாத், அசோக் கெலாட்
39 காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மீண்டும் வயநாட்டில் ராகுல்.. ஷிமோகாவில் சிவராஜ் குமார் மனைவி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com