ஜூன் மாதத்துக்குள் புதிய தலைவர் - காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

ஜூன் மாதத்துக்குள் புதிய தலைவர் - காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு
ஜூன் மாதத்துக்குள் புதிய தலைவர் - காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

காங்கிரஸுக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது என அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன், ராகுல் காந்தி, பிரியங்கா, மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். மூன்றரை மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால், வரும் 29ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மக்கள் நலன்சார்ந்த முக்கியப் பிரச்னைகளை கட்சியின் உறுப்பினர்கள் எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளின் மீது மத்திய அரசின் அணுகும்முறை அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு கொரோனாவை எதிர்கொண்ட விதத்தால் அதன் பாதிப்புகள் நீங்க பல ஆண்டுகள் ஆகும் எனவும் அவர் கவலை தெரிவித்ததுடன், காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தல் தொடர்பான விவரங்களையும் கே.சி வேணுகோபால் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com