காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? இன்று முடிவு?

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? இன்று முடிவு?

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? இன்று முடிவு?
Published on

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அதன் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்த நிலையில், அவரது தாய் சோனியா காந்தி தற்காலிக தலைவராக செயல்பட்டு வருகிறார். கட்சிக்கு நிரந்தர தலைமை தேவை என குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் எழுதிய கடிதம் கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், பீகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சியாக தனது பணிகளை செய்யவில்லை என மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், அதன் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாக இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் பீகார் தேர்தல் தோல்வி, புதிய தலைவர் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com