பீகாரில் மகா கூட்டணியின் தோல்விக்கு காங்கிரஸே காரணம்: ஆர்.ஜே.டி மூத்தத் தலைவர்

பீகாரில் மகா கூட்டணியின் தோல்விக்கு காங்கிரஸே காரணம்: ஆர்.ஜே.டி மூத்தத் தலைவர்
பீகாரில் மகா கூட்டணியின் தோல்விக்கு காங்கிரஸே காரணம்: ஆர்.ஜே.டி மூத்தத் தலைவர்

70 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி,  70 பொதுக்கூட்டங்களைக் கூட நடத்தவில்லை. பீகாரில் ராகுல் காந்தி 3 நாட்கள் தான் பிரச்சாரம் செய்தார். பிரியங்கா காந்தி பிரச்சாரத்துக்கு வரவேவில்லை என்று ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவர் சிவானந்த் திவாரி கூறியுள்ளார்

 பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உள்ள தேஜஷ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் சிவானந்த் திவாரி, மகா கூட்டணியின் தேர்தல் தோல்வி குறித்து பேசும்போது “பீகாரில் தேர்தல் பிரச்சாரம் முழுவீச்சில் இருந்தபோது, ராகுல்காந்தி சிம்லாவிலுள்ள பிரியங்காந்தியின் இடத்திற்கு சுற்றுலா வந்திருந்தார். இதுபோலவா கட்சி நடத்துவது? காங்கிரஸின் இதுபோன்ற செயல்கள் பாஜகவுக்குத்தான் நன்மை பயக்கிறது” என தெரிவித்துள்ளார்

அவர் மேலும் “பீகாரில் மகா கூட்டணியின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். 70 தொகுதியில் போட்டியிட்ட அவர்கள் 70 பொதுக்கூட்டங்களைக் கூட நடத்தவில்லை. ராகுல் காந்தி 3 நாட்கள் தான் பிரச்சாரம் செய்தார். பிரியங்கா காந்தி வரவே வில்லை. மக்களிடம் கொஞ்சம் கூட செல்வாக்கு இல்லாத காங்கிரஸ் தலைவர்கள் தான் பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். இது கொஞ்சம் கூட சரியல்ல. பீகாரில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் காங்கிரஸின் கவனம் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களை நிறுத்துவதே. ஆனால் அதிக இடங்களை வெல்ல காங்கிரஸ் தவறிவிட்டது ’’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com