புதிய அரசு அமைப்பவர்களுக்கு பாராட்டுகள்: ராகுல் காந்தி

புதிய அரசு அமைப்பவர்களுக்கு பாராட்டுகள்: ராகுல் காந்தி

புதிய அரசு அமைப்பவர்களுக்கு பாராட்டுகள்: ராகுல் காந்தி
Published on

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் ஏற்பதாகவும், புதிதாக அரசு அமைக்க இருப்பவர்களைப் பாராட்டுவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ட்விட்டரில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், தன் மீது மிகுந்த அன்பு காட்டிய குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய பலமான ஒழுக்கம் மற்றும் துணிவுடன் நடந்து கொண்ட கட்சித் தொண்டர்கள் தன்னைப் பெருமை கொள்ளச் செய்து விட்டதாகவும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். 

இதற்கிடையே குஜராத்தில் கூடுதல் இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி இருப்பது ராகுல்காந்தியின் அரசியல் பயணத்துக்கான சிறந்த தொடக்கமாக இருக்கிறது என அக்கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் கூறியுள்ளார். இலக்கை அடைய முடியாவிட்டாலு‌ம் காந்தி தலைமையில், காங்கிரஸ் தனது பயணத்தை சிறப்பாக தொடங்கி இரு‌க்கிறது என சசி தரூர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். குஜராத்தில் காங்கிரஸின் பலம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாகவும், ‌இந்த மாற்றம் ராகுல்காந்தியால் நிகழ்ந்திருக்கிறது என்று அக்கட்சியினர் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com