தினமும் ரூ.4 லட்சத்துக்கு காளான் சாப்பிடும் மோடி: காங். வேட்பாளர்

தினமும் ரூ.4 லட்சத்துக்கு காளான் சாப்பிடும் மோடி: காங். வேட்பாளர்

தினமும் ரூ.4 லட்சத்துக்கு காளான் சாப்பிடும் மோடி: காங். வேட்பாளர்
Published on

பிரதமர் மோடி தினமும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள காளான்களை சாப்பிடுவதாக குஜராத் தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் வேட்பாளர் அல்பேஷ் தாக்குர் கூறியுள்ளார். 

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நாளை இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கிடையே நேற்று அகமதாபாத்தில் பரப்புரை செய்த காங்கிரஸ் வேட்பாளர் அல்பேஷ் தாக்குர், மோடி சாப்பிடும் காளான் ஒன்றின் விலை 80 ஆயிரம் ரூபாய் என்றும், ஒவ்வொரு நாளும் 5 காளான்களை அவர் சாப்பிடுவதாகவும் கூறினார். 

தைவான் நாட்டிலிருந்து அந்த காளான் இறக்குமதி செய்யப்படுவதாக கூறிய அவர், குஜராத் முதலமைச்சராக இருந்த போதிருந்தே அந்த காளானை மோடி சாப்பிட்டு வருவதாகவும் கூறினார், 35 ஆண்டுகளுக்கு முன் இருந்த மோடியின் படத்தை பார்த்தால் தற்போது அவர் மிகவும் சிவப்பாக மாறியிருப்பது தெரியவரும் என்றும், காளான் சாப்பிட்டதுதான் அதற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com