இந்தியா
கருப்பு நிற ஆடையில் நாடாளுமன்றத்திற்கு வந்த பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.க்கள்
கருப்பு நிற ஆடையில் நாடாளுமன்றத்திற்கு வந்த பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.க்கள்
2021 - 2022 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். கொரோனா நெருக்கடி, வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்திற்கு மத்தியில் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் மீது பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜஸ்பீர் சிங் கில் மற்றும் குர்ஜீத் சிங் ஆஜ்லா ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு கருப்பு நிற கவுன் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

