நிதிஷ்குமாரா.. கார்கேவா? I-N-D-I-A கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? ராகுல் கருத்தால் அதிருப்தி!

I-N-D-I-A கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதீஷ்குமாரை நியமிப்பது தொடர்பாக மூத்த காங். தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் நிதிஷ்குமாருக்கு அதிருப்தியை கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதீஷ்குமார், கார்கே, ராகுல்
நிதீஷ்குமார், கார்கே, ராகுல்ட்விட்டர்

I-N-D-I-A கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 2024 பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பிரம்மாண்ட கூட்டணி அமைத்திருந்தாலும் தொடர்ந்து இந்த கூட்டணிக்குள் அவ்வப்போது சில சலசலப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன.

'INDIA' கூட்டணி
'INDIA' கூட்டணி புதிய தலைமுறை

கூட்டணிக்கு தலைமை யார், பிரதமர் வேட்பாளர் யார், யாருக்கு எந்தெந்த தொகுதி, எவ்வளவு தொகுதி என ஒவ்வொரு கட்டங்களிலும் ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் கருத்து மோதலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளநிலையில் நேற்றைய தினம் இந்தக் கட்சிகளின் காணொளி காட்சி வாயிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சிகளின் குழுத் தலைவர் என்ற பெயரில் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரும், கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் நிதிஷ்குமாரின் பெயரும் இருந்துள்ளது. இதில் கூட்டத்தில் கலந்துகொண்ட யாரும் எந்த கருத்தும் பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். ஆனால் ராகுல் காந்தி தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த பெயர்கள், தற்போதைய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியின் சம்மதமும் பெற வேண்டும் என தன் தரப்பு கருத்தாக கூறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

rahul gandhi
rahul gandhipt web

ஆனால் ராகுலின் கருத்து நிதிஷ் குமார் மற்றும் அவருடன் கூட்டணியாக உள்ள ராஷ்டிர ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அதிர்ச்சியை கொடுத்ததாகவும் இருவரும் தங்களது வெளிப்படையான அதிருப்தியை தெரியப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com