பி.எம்.கேர்ஸ் கணக்குகளை காட்டத் தயாரா? எல்.முருகனுக்கு மாணிக்கம் தாகூர் சவால்!

பி.எம்.கேர்ஸ் கணக்குகளை காட்டத் தயாரா? எல்.முருகனுக்கு மாணிக்கம் தாகூர் சவால்!

பி.எம்.கேர்ஸ் கணக்குகளை காட்டத் தயாரா? எல்.முருகனுக்கு மாணிக்கம் தாகூர் சவால்!
Published on
மக்கள் வரிப்பணமான பிரதமரின் நிவாரண நிதி மற்றும் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் சுருட்டிய பல்லாயிரம் கோடி கணக்குகளை காட்டத் தயாரா? என தமிழக பாஜக தலைவருக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, காங்கிரஸ் அறக்கட்டளையில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் எல்.முருகனுக்கு ட்விட்டரில் பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ‘’எங்கள் கட்சியின் அறக்கட்டளை வரவு செலவுகளை நாங்கள் வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்திருக்கிறோம். உங்கள் கட்சியின் வரவு செலவுகளைக் கூட கேட்கவில்லை.
 
மக்கள் வரிப்பணமான #PMCaresFunds மற்றும் Electoral Bonds மூலம் நீங்கள் சுருட்டிய பல்லாயிரம் கோடி கணக்குகளை காட்ட தயாரா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com